திருப்புவனம் பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருப்புவனம்,
திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இது தொடர்பாக திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சொந்த பராமரிப்பில் கட்டி வைத்து வளர்க்க பேரூராட்சி மூலம் மைக் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் கண்டறியப்பட்டால் திருப்புவனம் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பிடித்து அடைக்கப்படுவதோடு கால்நடைகளின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். இது தவிர்த்து கால்நடைகளை பராமரிப்பதற்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும்.
கோசாலையில் ஒப்படைக்கப்படும்
பேரூராட்சி மூலம் பிடித்து வைக்கப்படும் கால்நடைகளை 7 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கால்நடைகளை ப்ளூகிராஸ் சொசைட்டி அல்லது அருகிலுள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை வீட்டில் வைத்து சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story