மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை
மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில், பஞ்சப்பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடந்தது. ஏகாதசிக்கு முந்தைய தினம் பெருமாளுக்கு, நாச்சியார் திருக்கோலத்துடன், மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூப தரிசனத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. நேற்று காலை துவாதசி ஆராதனை நடந்தது. இதில் உற்சவர் பெருமாள், 5 தலை கொண்ட நாகத்தில் வைத்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. மூலவருக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் நடந்தது, மரகதவல்லித் தாயாருக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் சிறப்பு வழிபாட்டை நடத்தி வைத்தார். துவாதசி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வழிபட்டு தங்களது ஏகாதசி விரதத்தை முடித்தனர். முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் அடையும் நிகழ்ச்சியும், ராப்பத்து உற்சவ நிறைவு நிகழ்ச்சியும் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு சொர்க்கவாசல் மூடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 24-ந்தேதி திருமங்கை மன்னர் வேடுபறி உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story