சுகாதார பணிகள் துணை இயக்குனர் சைக்கிளில் சென்று ஆய்வு
சுகாதார பணிகள் துணை இயக்குனர் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி நேற்று அரியலூர் புறவழிச்சாலையில் இருந்து சைக்கிள் மூலம் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒட்டக்கோவில் துணை சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், மருத்துவ ஊழியர்கள் வாகனங்களில் வருவதை முடிந்தஅளவு குறைத்து சைக்கிளில் வருமாறு கேட்டுக் கொண்டார். ஆய்வு பணியின்போது பொதுமக்கள் தரப்பில், சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ராயபுரம், ஆதிகுடிகாடு, பொய்யூர் ஆகிய இடங்களுக்கும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story