அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம், டிச.16-
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெங்கநாதரின் தங்கை
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதே போல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனையும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன.
அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டுவர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது.
சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி
இதையொட்டி திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் ஹரிஷ்பட்டர் ஆகியோருடன் அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை வரவேற்றுப் பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெறும். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறும்.

Related Tags :
Next Story