திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:09 AM IST (Updated: 16 Dec 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திப்பெற்ற திருமலை நம்பி கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு சனி மற்றும் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. இதனால் திருமலைநம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், அந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி பக்தர்கள் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி, வனத்துறை சோதனை சாவடி முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் கூறுகையில், ‘இன்று முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது’ என்றார். 

Next Story