குளத்தில் செத்து மிதந்த மீன்கள்


குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:14 AM IST (Updated: 16 Dec 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு பகுதியில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

களக்காடு:
களக்காடு பகுதியில் உள்ள பெரியகுளங்களில் தாமரைகுளமும் ஒன்றாகும். இந்த குளம் தற்போது பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தின் கரைகளிலும் பெரிய, பெரிய மீன்கள் கொத்து, கொத்தாக இறந்து கிடக்கின்றன. மீன்கள் செத்து கிடப்பதால் ஒரு விதமான துர்நாற்றமும் வீசுகிறது. 

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். குளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.  எனவே குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story