வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
நெல்லை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுனில் நடந்தது.
நெல்லை:
நெல்லை வியாபாரிகள் சங்க 74-வது பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.
கூட்டத்தில் நெல்லை மாநகர் பகுதிகளில் சாலைகள் படு மோசமாக உள்ளது. அந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜன், மத்திய மாவட்ட தலைவர் செல்வராஜ், கூடுதல் செயலாளர் விநாயகம், நெல்லை மாநகர செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார், ஆதம்பாவா, குணசேகரன், கோடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story