ஒரே வருடத்தில் இரு முறை நிரம்பிய பெரியகுளம் கண்மாய்


ஒரே வருடத்தில் இரு முறை நிரம்பிய பெரியகுளம் கண்மாய்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:33 AM IST (Updated: 16 Dec 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஒரே வருடத்தில் இரு முறை பெரியகுளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
ஒரே வருடத்தில் இரு முறை பெரியகுளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  
பெரியகுளம் கண்மாய் 
வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி இப்பகுதியில்  800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை, நெல், வாழை உள்ளிட்ட  பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு தொடர்ச்சியாக நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தண்ணீர் வரத்து  அதிகரிப்பு 
ஒரு வருடத்தில் 2-வது முறையாக அதன் முழு கொள்ளளவை கண்மாய் எட்டி உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பெரியகுளம் கண்மாயை நம்பி எண்ணற்ற விவசாயிகள் வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் தற்போது பெய்த தொடர்மழையினால் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 
அதிலும் குறிப்பாக பெரியகுளம் கண்மாய் ஒரு வருடத்தில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் நாங்கள் விவசாய பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story