நெல்லை புதிய பஸ்நிலைய அறிவியல் பூங்காவில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுமா?
நெல்லை புதிய பஸ் நிலைய அறிவியல் பூங்காவில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் பிரதான நுழைவு வாசல் பகுதியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெயர் பலகைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அறிவியல் பூங்காவில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலைய அறிவியல் பூங்காவில் தமிழ் மொழியை புறக்கணித்து உள்ளனர். இது தமிழர்களை பெரிதும் வேதனைப்படுத்தி உள்ளது. புதிய பஸ் நிலையம் முன்பு தமிழர்களுக்காகவும், தமிழ்ப் பிள்ளைகளுக்காகவும் தமிழர்களின் வரிப்பணத்தில், அதுவும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் அமைக்கப் பெற்றுள்ள பூங்காவில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் மொழி கொள்கையை தெரிந்து கொள்ளாத, தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை அவமதிக்கிற அதிகாரிகளை தமிழ் தேச தன்னுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனே அங்குள்ள பெயர் பலகைகளை தமிழில் ைவக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story