இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாம்
விருதுநகரில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் இந்நகர அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து விளக்கி பேசினார். இல்லம் தேடி கல்வி திட்ட மாநில ஆலோசனை குழு உறுப்பினர் அமலராஜன் திட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். பயிற்சி முகாமில் 132 பயிற்றுனர்களும், 16 கருத்தாளர்களும் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமுக்கு வந்திருந்தோரை உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி விக்னேஷ் குமார் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் ஜமுனாராணி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கோபாலகிருஷ்ணன், மணிகண்டராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story