குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்


குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2021 2:06 AM IST (Updated: 16 Dec 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும், இரவில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடந்து வருகிறது. 

திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் தேர், முருகன் தேர், நடராஜர் தேர், குற்றாலநாதர் சுவாமி தேர், குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிய 5 தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் ரத வீதிகளில் சுற்றி பக்தர்களின் பக்தி கோஷத்துடன் மேளதாளங்கள் முழங்க நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவிழாவில் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 20-ந் தேதி காலை 4 மணிக்கு சித்திைர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.



Next Story