அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2021 2:13 AM IST (Updated: 16 Dec 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அடிப்படை வசதிகளை பார்வையிட்ட அவர், சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று, கட்டிடங்களின் தன்மை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, டாக்டர்கள் தினேஷ், திருமலை, வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், வேலம்மாள் (கிராம ஊராட்சி), நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுதா, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story