செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பாவூர்சத்திரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே செட்டியூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தனியார் செல்போன் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு இடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நிறுவனம் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை செய்யத் தொடங்கினர். அதற்கான தளவாட பொருட்களுடன் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அந்த பகுதி மக்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story