குற்றாலம் அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்


குற்றாலம் அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்
x
தினத்தந்தி 16 Dec 2021 2:43 AM IST (Updated: 16 Dec 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. 
நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. 

சுமார் 8 மாதங்களுக்கு பிறகு வருகிற 20-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அரசு அனுமதித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்தபோது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கரைகளில் தரைத்தளம் மற்றும் தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. அவை சரிசெய்யப்பட்டு பணி முடியும் தருவாயில் உள்ளது.

Next Story