எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி ஒருவர் படுகாயம்


எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Dec 2021 10:34 AM IST (Updated: 16 Dec 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி ஒருவர் படுகாயம்

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
போண்டா மாஸ்டர்
எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி சம்பூர்ணம் (வயது 53). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (41) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். மோட்டார்சைக்கிளை சிவலிங்கம் ஓட்டினார். சம்பூர்ணம் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 
வலைவீச்சு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சம்பூர்ணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிவலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 
இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரைவ வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story