ராசிபுரத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ராசிபுரத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2021 10:34 AM IST (Updated: 16 Dec 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா காரிப்பட்டி அருகே உள்ள காட்டு வளவை சேர்ந்தவர் குமார் (வயது 40). லாரி டிரைவர். இவருடைய முதல் மனைவி ஜோதி. 2-வது மனைவி கீதா. இவர்கள் இருவரும் தற்போது குமாரிடம் இருந்து விலகி விட்டனர். இதையொட்டி அவர் தற்போது அம்சவேணி என்ற திருமணமான பெண்ணை 3-வது மனைவியாக சேர்த்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் குமார், அம்சவேணியுடன் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இதற்கிடையில் குமார் அவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வீட்டின் உரிமையாளர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், போலீஸ் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story