மொரப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவர் சாவு
மொரப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவர் இறந்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவர் இறந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் இருந்து சேலம் செல்லும் ரெயில்வே பாதையில் தொங்கனூர் அருகே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 20) என்பதும், தர்மபுரி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது. மாணவர் ரெயிலில் அடிபட்டு இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரெயில்வே போலீசார் விசாரணை
இதையடுத்து ரெயில்வே போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story