சிக்னல் பழுதால் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சிக்னல் பழுது ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலைய நடை மேடைக்குள் புறநகர் மின்சார ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயில் சேவையிலும் பாதிப்பு எற்பட்டது. அதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை-சென்டிரலுக்கான புறநகர் ரெயில் சேவையும் முற்றிலுமாக முடங்கியது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து நேற்று மாலை வேலை முடிந்து சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு செல்ல இருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் சிக்னல் பழுது தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு 7 மணி அளவில் போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story