கூடலூர் அருகே மர்மவிலங்கு கடித்து கன்றுக்குட்டி பலி
கூடலூர் அருகே மர்மவிலங்கு கடித்து கன்றுக்குட்டி பலி
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாச்சிக் கொல்லி அருகே கோட்டகடவு பகுதியை சேர்ந்தவர் குட்டன். நேற்று முன்தினம் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது ஒரு கன்றுக்குட்டி மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் அவர் தேடினார். அப்போதும் அது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சோமன் வயல் என்ற இடத்தில் மர்ம விலங்கு கடித்து கன்றுகுட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கன்றுக்குட்டியை கடித்தது புலியா, சிறுத்தையா என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story