பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் திறப்பால் பழவேற்காடு தற்காலிக சாலை மீண்டும் மூழ்கியது


பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் திறப்பால் பழவேற்காடு தற்காலிக சாலை மீண்டும் மூழ்கியது
x
தினத்தந்தி 16 Dec 2021 8:08 PM IST (Updated: 16 Dec 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பெரும்பேடு குப்பம், சோமஞ்சேரி ரெட்டிபாளையம், வஞ்சிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரணி ஆற்றின் கரை உடைப்பாலும், கடப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக பழவேற்காடு செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டது.

ஆண்டார்மடம் கிராமம் சாலை துண்டிப்பால் நான்கு புறமும் பெரும் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பழவேற்காடு சாலை மணல் மூட்டைகள் மூலம் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து 1800 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆண்டார்மடம் கிராமத்தின் ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பழவேற்காடு தற்காலிகமான சாலை வெள்ளநீரில் மீண்டும் மூழ்கியது.


Next Story