தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் 900 டன் நெல் மூட்டைகள் வந்தன


தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் 900 டன் நெல் மூட்டைகள் வந்தன
x
தினத்தந்தி 16 Dec 2021 8:45 PM IST (Updated: 16 Dec 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் 900 டன் நெல் மூட்டைகள் வந்தன

பொள்ளாச்சி

தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் 900 டன் நெல் மூட்டைகள் வந்தன.

900 டன் நெல் மூட்டைகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து கோதுமை, மக்காச்சோளம், சோயா போன்றவை கொண்டு வரப்படுகின்றன. 
இங்கிருந்து தனியார் நிறுவனங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் நேற்று நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ரெயிலில் வந்த 900 டன் மூட்டை நெல் லாரிகள் மூலம் பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

பொள்ளாச்சிக்கு வந்தது

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பொள்ளாச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. 20 பெட்டிகளில் 25 ஆயிரம் மூட்டை நெல் கொண்டு வரப்பட்டன. 
வழக்கமாக திண்டுக்கல் வழியாக பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயில் வரும். தற்போது வேறு சரக்குகளை ஏற்றி வந்ததால் கரூர், கோவை வழியாக பொள்ளாச்சிக்கு வந்தது.
 60 லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றும் பணியில் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல்லை அரிசியாக்கி ரேஷன் கடைகள், சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
1 More update

Next Story