இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அரசு பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அரசு பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
சுல்தான்பேட்டை
தமிழக அரசின் இல்லம்தேடிக்கல்வித்திட்டத்திற்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சுல்தான்பேட்டை ஒன்றியம் மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு, சமூக ஆர்வலர் எம்.கே.முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று, இல்லம் தேடிக் கல்வித்திட்டம் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த இல்லம் தேடிகல்வி திட்டத்தின் கலைக்குழுவினர், குறுநாடகம், பாடல்கள் பாடியும், கரகாட்டம் ஆடியும், பறை அடித்தும் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில், வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முகமது ரபிக், செஞ்சேரிமலை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி மற்றும் பெற்றோர் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story