திருச்செந்தூர் கடற்கரையில் கிடக்கும் சாமி சிலைகளால் பரபரப்பு


திருச்செந்தூர் கடற்கரையில் கிடக்கும் சாமி சிலைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 9:47 PM IST (Updated: 16 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடற்கரையில் கிடக்கும் சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரையில் கிடக்கும் சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சாமி சிலைகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது மார்கழி மாதம் பிறந்துள்ளதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டமும், முருக பக்தர்களின் கூட்டமும் கோவிலில் அதிகரித்துள்ளது.

அதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோவில் தென்பகுதி கடற்கரையோரம் அய்யா வைகுண்டர் அவதாரபதி உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முருகன், ஆஞ்சநேயர், மயில், நந்தி போன்ற கல் சிலைகள் கிடக்கின்றது. இதில் முருகன், ஆஞ்சநேயர் சிலைகள் சுமார் 2½ அடி உயரமும், மயில் சிலை 1 அடியும் உள்ளது. இந்த சிலைகளை வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்து கடலில் போட்டுச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிலைகளை ஏராளமான பக்தர்கள் பார்த்து செல்கிறார்கள். 

பாதுகாக்க வேண்டும்

இதுகுறித்து கடலில் புனித நீராட வரும் பக்தர்கள் கூறுகையில், 'திருச்செந்தூர் கடற்கரையில் கடந்த 2 நாட்களாக சாமி சிலைகள் கிடக்கிறது. இந்த சிலைகள் அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை நாங்கள் பார்த்து வியந்து உள்ளோம். இந்த சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டு பாதுகாக்க வேண்டும்' என்றனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story