மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
முருகபவனம்:
திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோவில்களில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருவிளக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜைகள் தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில், மேற்கு கோவிந்தாபுரம் ருத்ர காளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோவில்களில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
வேடசந்தூரில் ஆர்.எச்.காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story