108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
108 ஆம்புலன்சில் நடந்த பிரசவத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
ராமநாதபுரம்,
கமுதி அருகே உள்ள பேரையூர் கண்டேன்கனி கிராமத்தை சேர்ந்தவர் சக்திமுருகானந்தன் என்பவரின் மனைவி கவிதா (வயது25). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. பேரையூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சரியில்லாத தால் 108 ஆம்புலன்சில் ஏற்றி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் கீழத்தூவல் அருகே கவிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் இன்னாசி, முதலுதவி பயிற்சி பெற்ற உதவியாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். இதனால் கவிதாவிற்கு 108 ஆம்புலன்சிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்புலன்சில் வைத்து உரிய காலத்தில் சிகிச்சை அளித்து நலமுடன் பெண் குழந்தை பெற உதவிய ஆம்புலன்சு பணியாளர்களை சக்தி முருகானந்தன் மற்றும் ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story