பதுக்கி வைத்திருந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல்
கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 330 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மசேகர், தேவசேனாதிபதி, தனிக்கொடி மற்றும் போலீசார் கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை பகுதியில் ஒரு வீட்டின் அருகே சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது38), ஆறுமுகம் (40) ஆகியோர் தங்களது வீடுகளின் அருகே புதரில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதேபோல கோடியக்காடு பகுதியில் மணிமாறன் (35) என்பவர் தனது வீட்டின் அருகே புதரில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாஸ், ஆறுமுகம், மணிமாறன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் வீதம் 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story