வங்கி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார்மயமாக்குவதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார்மயமாக்குவதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகள் மூடப்பட்டு இருந்தன
ெரயில்வே, தேசிய வங்கிகள் போன்ற நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி பணியாளர்கள் சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி மயிலாடுதுறை நகரில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளின் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம் அனைத்து தனியார் வங்கிகளும் திறக்கப்பட்டு சேவைகள் நடந்தன.
வாடிக்கையாளர்கள் அவதி
வேலை நிறுத்த போராட்டத்தால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவையை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 50 உள்ளன. அதில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிகளின் நுழைவு வாயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story