278 வங்கிகள் வேலை நிறுத்தம்
வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் திட்டத்தை கைவிடக் கோரி சிவகங்கை மாவட்டத்தில் 278 வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
சிவகங்கை,
வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் திட்டத்தை கைவிடக் கோரி சிவகங்கை மாவட்டத்தில் 278 வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
முழு அடைப்பு
சிவகங்கை மாவட்டத்தில் 278 தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தேசிய வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள 278 வங்கிகள் செயல்படவில்லை. வங்கிகளின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டு வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றனர்.
ஆன்லைன்
ஆனால் வங்கி ஏ.டி.எம்.கள் மற்றும் ஆன்லைன் வங்கி ஆகியன செயல்பட்டன. இந்த போராட்டத்தினால் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப் பட்டது. தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல் பட்டன.
Related Tags :
Next Story