உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் சேவை
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
உடுமலை
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
திருச்செந்தூருக்கு ரெயில்
பாலக்காடு-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டு வந்த ரெயில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்கும்படி ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து முதலில் பொள்ளாச்சி-திருச்செந்தூர் இடையை ரெயிலை இயக்கத்திட்டமிடப்பட்டு, பின்னர் இந்த ரெயிலை பாலக்காடு வரை நீடித்து இயக்குவதற்கு தென்னக ரெயில்வே முடிவு செய்து உத்தரவிட்டது. அதன்படி 20 மாதங்களுக்குப்பிறகு இந்த ரெயில் முன்பதிவில்லாத விரைவு ரெயிலாக நேற்று பிற்பகல் 12.05 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. இங்கிருந்து 7.47 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக பாலக்காடு சென்றது. இந்த ரெயில் தினசரி திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு வந்து இந்த வழித்தடத்தில் பாலக்காடு செல்லும்.
உடுமலை வழியாக
அதேபோன்று பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து இன்று காலை 4.55 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 6.30க்கு வந்து சேரும்.
அங்கிருந்து 6.40க்கு புறப்பட்டு 7.08 மணிக்கு உடுமலைக்கு வந்து, உடுமலையிலிருந்து 7.10க்கு புறப்பட்டு 8.10 க்கு பழனி சென்றடையும். அங்கிருந்து 8.15க்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு மாலை 3.45 க்கு சென்று சேரும்.
Related Tags :
Next Story