தேசிய வாக்காளர் தின சிறப்பு போட்டி


தேசிய வாக்காளர் தின சிறப்பு போட்டி
x
தினத்தந்தி 16 Dec 2021 11:02 PM IST (Updated: 16 Dec 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 18 வயது நிரம்பிய வர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 18 வயது நிரம்பிய வர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் தினம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதியை தேசிய வாக்காளார் தினமாக கொண்டாடி வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி களில், 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லா வாக்குப்பதிவு, வாக்காளராக பதிவதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டி தயாரித்தல், ஓவியம் முழக்க வாசகம் ஏற்படுத்துதல், பாட்டு (2-3 நிமிட வீடியோ பதிவு), குழு நடனம் (2-3 நிமிட வீடியோ பதிவு) கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தலாம். 
பரிசு
மேலும், போட்டிகளில் அரசியல் சார்பு மற்றும் பிறரை புண்படுத்தும் வாசகங்கள் இடம் பெறக்கூடாது. ஒவ்வொரு இனத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் 15 இடம் பிடிக்கும் மாணவ, மாணவியரின் படைப்புகள் சென்னை, தலைமை தேர்தல்அலுவலரின் அலுவலகத்திற்கு சமர்ப் பிக்கப்பட உள்ளது. போட்டிகள் அனைத்துப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகிற 24-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 
மேலும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க இயலாத 18 வயது பூர்த்தி அடைந்த மாணவ- மாணவிகள் சிவகங்கை, தேவகோட்டை  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தங்களின் படைப்புக்களை வருகிற 24-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும், https://www.elections.tn.gov.in/SVEEP2022/officerslogin என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story