தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பாறைப்பொடி மூடைகள் அகற்றப்பட்டது
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் கருங்கல் சுண்டவிளையில் கால்வாயின் கரைப்பகுதி சேதமடைந்து காணப்பட்டது. அத்துடன் சாலையோரத்தில் பாறைப்பொடி மூடைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’புகார் பெட்டியில் 13-12-2021 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாறைப்பொடி மூடைகளை சாலையில் இருந்து அகற்றி கால்வாய்கரையை பலப்படுத்தி நேர்த்தியாக அடுக்கி விட்டனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் அமைக்கப்படுமா?
தமிழ்நாட்டில் வானிலை ஆய்வு மையம் சென்னையில் உள்ளது. அங்கிருந்து புயல், மழை குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 3 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது. இங்கு அடிக்கடி கடல் சீற்றமும், நீர்மட்டம் உயர்வு, தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை உடனுக்குடன் அறிவிக்க கன்னியாகுமரியில் வானிலை ஆய்வு மையம் கிளை அமைக்க வேண்டும்.
-ஆனந்தநாராயணன், மருங்கூர்.
ஆபத்தான நிலையில் நீர்தேக்க தொட்டி
மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில், நரையன்விளையில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இது சரியாக பராமரிப்பு இன்றி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. தொட்டியின் அடிப்பகுதியில் கம்பிகள் வெளியே ெதரிந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டிைய அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.
சாலை பணி தொடங்குமா?
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் தலக்குளம் குலாலர் தெருவில் இருந்து கக்கோட்டுத்தலை வரை கடந்த மாதம் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. அப்போது கனமழை பெய்ததால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சாலைப்பணி முடிவடையாததால் எங்கள் பகுதிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்போது மழை ஓய்ந்துள்ளது. ஆனால், பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைவில் முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, தலக்குளம்.
சீரமைக்க வேண்டிய சாலை
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்தில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு வரும் சாலை மிகவும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த பகுதி மக்கள் வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழகலுங்கடி காலனியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் நல்லி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல்லியின் அடிப்பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, உடைந்த குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.மாண்முரளி, கீழக்கலுங்கடி.
தூர்வார வேண்டும்
குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு சிறிய குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.செல்வின் குமார், கல்லுக்கூட்டம்.
Related Tags :
Next Story