தொடர் மழையால் தடுப்பணைகள் நீர் நிரம்பி வழிகின்றன
முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி நீர் வழிகின்றன.
முத்தூர்
முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி நீர் வழிகின்றன.
சாகுபடி
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், மங்களப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மேட்டுப்பாளையம் வருவாய் கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது மற்றும் இடைவிடாது சாரல், மிதமான, பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையால் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், ஓடைகள், தடுப்பணைகள் ஆகியவைகளுக்கு நீர்வரத்து வழக்கத்தைவிட இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்தது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கீழ்பவானி பாசன கால்வாய்களில் செல்லும் நீர், உபரி நீராக வெளியேறி அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு வந்து சேர்ந்து வருகிறது.
நிரம்பியது
இதனால் இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தடுப்பணைகள் தற்போது நிரம்பி நீர் வழிந்து ஓடுகிறது. மேலும் ஓடைகளில் மழை நீர் பாய்ந்து செல்கிறது. மேலும் நகர, கிராம பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. இதனால் இப்பகுதிகளில் விவசாய பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
மேலும் நகர, சுற்றுவட்டார கிராம பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் நன்கு பாதுகாக்கப்பட்டு உள்ளது.
இப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையால் நீர்நிலைகள், ஓடைகள், குளங்கள், தடுப்பணைகள் ஆகியவைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிராம பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story