திருவாடானையில் முன்மாதிரி அங்கன்வாடி மையம்
திருவாடானையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை ஊராட்சி நிர்வாகம் முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைத்து வருகிறது.
தொண்டி,
திருவாடானையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை ஊராட்சி நிர்வாகம் முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைத்து வருகிறது.
புதிய கட்டிடம்
திருவாடானையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் செயல்பட்டு வந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் சேதமடைந்து விட்ட நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றி விட்டு தற்போது அதே இடத்தில் சுமார் ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுஉள்ளது.
இதில் சமையல் அறை, பொருட்கள் வைப்பதற்கான அறை மற்றும் குழந்தைகள் படிக்கவும் விளையாடுவதற்கான அறை, குழந்தைகள் பயன் படுத்தும் கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன. திருவாடானை ஊராட்சி நிர்வாகம் இந்த அங்கன்வாடி மையத்தை முன்மாதிரி அங்கன்வாடி மையமாக மாற்ற கூடுதல் வசதிகளை ஊராட்சி நிதியின் மூலம் செய்து வருகிறது.
ஆய்வு
இது குறித்து ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு கூறிய தாவது:- புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத் தில் வெளி புறத்தில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண கலரில் கார்டூன் படங்கள் வரைந்தும் உள்பகுதியில் சத்தான காய்கறி, பழங்கள், கீரை வகைகள், மற்றும் தேச தலைவர் களின் புகைப்படங்கள் குழந்தைகள் எளிதாக வாசித்து பழக தமிழ், ஆங்கில எழுத்துக்கள், கணிதம் போன்ற பாடத் திட்டங்கள் எழுதப்பட்டு உள்ளன.
குழந்தைகள் எளிதாக மையத்திற்குள் செல்ல சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுஉள்ளது. மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர். மேலும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் வழி காட்டுதலின்படி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
காய்கறி தோட்டம்
மேலும் மையத்தின் வாளகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைப்பதுடன் காய்கறி தோட்டம் அமைத்து குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு சத்தான காய்கறிகள் கீரை வகைகள் தினமும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மையத்தை சுற்றிலும் மரக் கன்றுகள் நடப்பட உள்ளது.மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய முன் மாதிரி அங்கன்வாடி மையமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story