மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பலி


மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 16 Dec 2021 11:44 PM IST (Updated: 16 Dec 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி பவுணுஅம்மாள் (வயது 65). இவர்கள் மண் சுவரால்ஆன ஷீட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் பவுணுஅம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பக்க மண் சுவர் அவர் மீது சரிந்து விழுந்தது. 

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story