முழுகொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி
சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்து சேரும் தண்ணீரை சேமித்து வைத்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் மற்றும் கொரட்டூர் அணைக்கு திறந்து விடப்படுவது வழக்கம். அம்மபள்ளி அணை நீர் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று மாலை ஏரி நீர்மட்டம் 34.85 அடி ஆக பதிவாகி முழு கொள்ளளவ எட்டியது. 3.100 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 110 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 110 அடி, கொரட்டூர் அணைக்கு வினாடிக்கு 204 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Related Tags :
Next Story