தாக்குதலில் காயமடைந்த வாலிபர் சாவு


தாக்குதலில் காயமடைந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:53 PM IST (Updated: 16 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக 4 பேர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக 4 பேர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள் மோதல்
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் காமராஜபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). தீபாவளி பண்டிகை அன்று இவர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இருளப்பபுரத்தை சேர்ந்த சிவபாரத், ராஜா ஆகியோர் வந்தனர். எதிர்பாராதவிதமாக பிரசாந்த் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இச்சம்பவத்தால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரம் அடைந்த சிவபாரத் மற்றும் ராஜா ஆகியோர் தங்களது நண்பர்களான சுபாஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு வந்தனர். பின்னர் 4 பேரும் கும்பலாக சேர்ந்து பிரசாந்தை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 
கொலை வழக்காக மாற்றம்
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசாந்த் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 
முன்னதாக தாக்குதல் தொடர்பாக சிவபாரத் உள்ளிட்ட 4 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். முதலில் இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசாந்த் இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Next Story