வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகள்


வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகள்
x
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டு என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டு என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாடுகளால் விபத்து

வேலூர் மாநகராட்சியில் சாலைகள் அனைத்தும் குறுகலாகவே காணப்படுகிறது. அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் பலர் தங்களது மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அவைகள் சாலைகளிலேயே படுத்து தூங்குகிறது. மேலும் பல மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

சில இடங்களில் சாலையில் பல மணி நேரமாக மாடுகள் நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகளோ கண்துடைப்பு நடவடிக்கையாக சில மாடுகளை பிடித்துச் செல்கின்றனர். அபாராதம் விதிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால் அந்த அபராத தொகை குறைந்த அளவே இருப்பதால் மாடுகளை உரிமையாளர்கள் மீட்டு மீண்டும் சாலையிலேயே விடுகின்றனர். அந்த மாடுகள் பிளாஸ்டிக் குப்பைகளையே உணவாக உட்கொள்கின்றன.

இதனால் மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையும் உள்ளது. பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அதிக தொகையில் அபராதம் விதிக்க வேண்டும். அவ்வாறு விதித்தால் அவர்கள் மீண்டும் மாடுகளை சாலையில் அவிழ்த்து விடமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story