திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்த வந்ததாக வாலிபர் மீது பொதுமக்கள் தாக்குதல்


திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்த வந்ததாக வாலிபர் மீது பொதுமக்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Dec 2021 12:00 AM IST (Updated: 17 Dec 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வார்டில் சுற்றித்திரிந்த வாலிபர்

திருப்பத்தூர்

திருப்பத்துர் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அங்குள்ள குழந்தைகள் வார்டு பிரிவில் கடந்த ஒரு வாரமாக மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரிடம் விசாரணை செய்ததில் நோயாளிகளுடன் உதவிக்கு வந்துள்ளதாக கூறி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று குழந்தைகள் பிரிவில் இருந்த அவரை, குழந்தை கடத்த வந்திருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி மருத்துவமனை நிர்வாகம் மூலம் திருப்பத்துர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 35), என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் விடுவித்தனர்.

Next Story