கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.


கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று  தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
x
தினத்தந்தி 17 Dec 2021 12:02 AM IST (Updated: 17 Dec 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

கால்நடை மருத்துவ முகாம்

திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமாரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி ஏ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடை வளர்த்த 5 விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

வீடுகளுக்கே சென்று

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகள் உள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு மாதனூரில் கோமாரி நோய் கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் 11 கால்நடை மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் 3 அல்லது 4 கால்நடை மருத்துவர் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்களை அமைத்து வீடு தோறும் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். 

நமது மாவட்டத்தில் மருத்துவர்கள், உதவியாளர்களை கொண்டு தினமும் கிராமங்கள்தோறும் இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. கோமாரி நோய் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் அவர்களது வீடுகளுக்கே சென்று செலுத்தப்படும். கால்நடை வளர்க்கும் பொது மக்கள் இதுபோன்ற முகாம்களை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், கால்நடை பராமாரிப்புத்துறை உதவி இயக்குநர் நாசர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயா, ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா, துணை தலைவர் வடிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் சத்யா, தீபக், லில்லி இந்திராணி, பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story