கோவில் மணியை திருடிய 2 ேபர் கைது
கோவிலில் மணியை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் வேட்டைகருப்பர் கோவில் உள்ளது. கடந்த 12-ந் தேதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் அங்கு கோவில் மணி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், பொன்னமராவதி புதுவளவு கொடிக்கி முண்டான் அம்பலம் சந்து பகுதியை சேர்ந்த நல்லையா மகன் வடிவேல் (வயது 35), காட்டுப்பட்டி ஊராட்சி வெள்ளையாண்டிபட்டி சந்திரன் மகன் கணேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story