வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு


வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 1:22 AM IST (Updated: 17 Dec 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நாய்க்கு முதியவர் வளைகாப்பு நடத்தினார்.

விருதுநகர்,
திருநெல்வேலியை சேர்ந்தவர் அருள் அரசு (வயது 70). நில புரோக்கரான இவர் தனது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இதில் பெண் நாய்க்கு திரிஷா என பெயரிட்டுள்ளார். இந்த நாய் தற்போது கர்ப்பமாக உள்ளது. இந்த நிலையில் விருதுநகருக்கு நில விற்பனை தொடர்பாக வந்த இவர் இங்குள்ள தனது வீட்டில் நாய்க்கு வளைகாப்பு நடத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பெண் நாய் திரிஷா மிகவும் புத்திசாலித்தனமானது. 7 வயதான திரிஷா, வீட்டில் உள்ள ஆட்டை அவிழ்த்து விட்டால் அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வரும். வீட்டை விட்டு நான் கிளம்பி விட்டால் காரில் கூடவே வரும். மிகவும் பாசமான இதற்கு போன வருடம் வளைகாப்பு நடத்தினேன். அதில் ஐந்து குட்டிகளை ஈன்றது. தற்போது மீண்டும் அதற்கு வளைகாப்பு நடத்தி 3 வித சாப்பாடு போட்டேன். விழாவிற்கு வந்தவர்களுக்கு கறி பிரியாணி வழங்கப்பட்டது .
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story