திருமயம் பகுதியில் 16 ஆடுகள் திருட்டு


திருமயம் பகுதியில் 16 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 17 Dec 2021 1:32 AM IST (Updated: 17 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் பகுதியில் 16 ஆடுகள் திருட்டு போனது

திருமயம்
திருமயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு திருடப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆடு திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் பலனாக திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருமயம் பகுதியில் ஆடு திருட்டு குறைந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் 2 இடங்களில் 16 ஆடுகள் திருட்டு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமயம் அருகே உள்ள முருகாண்டிப்பட்டியை சேர்ந்த பூங்கொடி (வயது 40) வீட்டில் கட்டி வைத்திருந்த 8 ஆடுகள் திருட்டு போய்விட்டதாக பனையப்பட்டி போலீசில் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதேபோல் பிள்ளைபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி (45) என்பவர் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் திருடப்பட்டு விட்டதாக நமணசமுத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story