நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:37 AM IST (Updated: 17 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 
ராஜபாளையம் 
ராஜபாளையம் முடங்கியார் சாலை உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. 
இதனால் அய்யனார் கோவில், ராஜூக்கள் கல்லூரி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன சுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பழையபாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ெரயில்வே பீடர் சாலை, மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், பெரிய கடை பஜார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 
விருதுநகர் 
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. 
ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர். நகர், முக்குரோடு, வச் சக்காரப்பட்டி, பட்டம்புதூர், ஆவுடையாபுரம், மேலச்சின்னையாபுரம், நடுவப்பட்டி, வாடியூர், முத்துலாபுரம், முதலிப்பட்டி, சங்கரலிங்கபுரம், அம்மாபட்டி, இ. முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், இனாம் ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்டபட்ட அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பரமேஸ்வரி மில், வெம்பூர், பந்தல்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 வரை மின்தடை செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார். 

Next Story