தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குப்பைகள் அள்ளப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் வளவன்புரம் மெயின் ரோட்டில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழை தண்ணீரும் தேங்கி குப்பகைள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவு அயாபம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வளவன்புரம், பொதுமக்கள்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை யாகப்பா நகர் நர்மதா தெருவில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் தேங்கி குப்பைகள் அழுகி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவு அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கிறார்கள். தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குப்பைள் தேங்குவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், யாகப்பாநகர்.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள வடக்கிகாடு கிராமத்தில் உள்ள சாலைகள் குண்டு, குழியுமாக உள்ளது. இந்த சாலையில் மழை தண்ணீர் தேங்கி விடுவதால், பள்ளங்கள் இருப்பது தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைத்து தரக்கோரி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
-வடக்கிகாடு, பொதுமக்கள்.
Related Tags :
Next Story