திருச்சி சிறை வார்டர் தற்கொலை முயற்சி


திருச்சி சிறை வார்டர் தற்கொலை முயற்சி
x

திருச்சி சிறை வார்டர் தற்கொலை முயற்சி

திருச்சி, டிச.17-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, வார்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராம்குமார் எறும்பு மருந்து (விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தற்போது, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story