திருப்பாவை பட்டுப்புடவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்
மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை பட்டுப்புடவையில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை பட்டுப்புடவையில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பாவை பாடல்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுேதாறும் மார்கழி மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக மார்கழி மாதத்தை முன்னிட்டு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட திருப்பாவை பாடல்கள் அடங்கிய மற்றும் ஆண்டாள் உருவம் பொறித்த பட்டுப்புடவை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
சாமி தரிசனம்
இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல திருப்பாவை அடங்கிய பட்டுப்புடவை அணிந்து காட்சி அளிப்பதை காண எண்ணற்ற பக்தர்கள் திரண்டனர்.
மார்கழி மாத சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
Related Tags :
Next Story