திருநங்கை வீட்டில் திருட்டு


திருநங்கை வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:16 AM IST (Updated: 17 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கை வீட்டில் திருட்டு

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே கீழகல்குறிச்சி பகுதியை சேர்ந்த திருநங்கை விஷ்ணுபிரியா (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஷ்ணுபிரியா உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் கம்மல், 5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு சமையல் பாத்திரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story