நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்


நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்
x
தினத்தந்தி 17 Dec 2021 2:28 AM IST (Updated: 17 Dec 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.14 லட்சம் கிடைத்துள்ளது.

நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். 3 மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, அதில் உள்ள பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காலையில் 21 உண்டியல்களும் திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், ஆய்வாளர்கள் முருகன், வள்ளி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, பேஸ்கார் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்த பணியில் மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். மாலையில் காணிக்கை எண்ணும் பணி முடிவடைந்தது. மொத்தம் ரூ.14 லட்சத்து 17 ஆயிரத்து 787-ம், 56.300 கிராம் தங்கமும், 386 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து இருந்தன. அவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.



Next Story