கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையார் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 48), சங்கர்(42), உடையார்பாளையத்தை சேர்ந்த நூர்முகம்மது(43) ஆகியோர் தங்களது மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story