பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 2:57 AM IST (Updated: 17 Dec 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 80 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் குறித்து தெரியாத பொதுமக்கள் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரியலூரில் ஒரு வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள 2 வங்கிகள், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வங்கி, இறவாங்குடி கிராமத்தில் உள்ள ஒரு வங்கி ஆகிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டமின்றி வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்சுருட்டி பகுதியில் முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி மட்டும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story